எம் எஸ் எஸ் மணியன், பொருளாளர், மலையாளம் தமிழ் மற்றும் ஆங்கில எழுத்தாளர்கள் சங்கம், திருவனந்தபுரம்.;
தமிழ் இலக்கிய உலகம் பாவேந்தர் என்றால் பாரதிதாசனையும் கவிஞர் என்றால் கண்ணதாசனையும் இசை ஞானி என்றால் இளையராஜாவையும் போற்றுவது போல் மலையாள இலக்கிய உலகில் சுல்தான் என்ற பெயரில் அறியப்படுபவர் வைக்கம் முகமது பஷீர் இவர் ஒரு சிறுகதை எழுத்தாளர் நாவலாசிரியர் மட்டுமல்ல சுதந்திரப் போராட்ட வீரர், பயணி, சிந்தனையாளர் மனிதநேயபற்றாளர் என்ற பல்வேறு பரிணாமங்களை உடையவர் அவரது படைப்புகளில் காணப்படும் எளிமை, நகைச்சுவை, வாழ்க்கை நெறி மற்றும் மனிதநேயம் என்றும் வாசகர்களை ஈர்க்கின்ற ஒன்றாகும். 1908 ஆம் வருடம் ஜனவரி மாதம் 21ஆம் தேதி கோட்டயம் மாவட்டத்தின் தலையோலப்பரம்பு என்ற ஊரில் அப்துல் ரகுமான் - குஞ்சம்மா தம்பதிகளின் தலைமகனாக பிறந்தார்.;