திரு. சண்முக. ஞானசம்பந்தன் முதுநிலை அறிவிப்பாளர் (பணி நிறைவு) அகில இந்திய வானொலி நிலையம்;
கி.பி. 9ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் சோழ நாட்டில் பிறந்து இளம் வயதிலேயே துறவறம் ஏற்று மதுரையில் வாழ்ந்த சமணர் திருத்தக்கத்தேவர். “துறவறம் அன்றி இல்லற இன்பம் குறித்து சமண முனிவர்களான உங்களால் எழுத இயலாது” என தனக்கு முன்பு விடுக்கப்பட்ட சவாலை ஏற்று அவர் இயற்றியதாகக் கருதப்படுவது சீவக சிந்தாமணி. சீவக சிந்தாமணி ஐம்பெரும் காப்பியங்களில் மூன்றாவதாகக் கருதப்படுகிறது. சீவகசிந்தாமணி என்ற இந்தக் காப்பியம் சமஸ்கிருத மொழியின் தழுவலாகவே அமைந்தது. சீவக சிந்தாமணியில் உள்ள கதை, குணபத்ரரின் உத்திரபுராணத்தை அடிப்படையாகக் கொண்ட வாடிபாசிங்கரின் பழைய சமஸ்கிருத நூலான க்ஷத்ரசூடாமணியில் காணப்படும் கதையே என்று காமில் ஸ்வெலெபில் கூறுகிறார். ;
