ஆடிட்டர் கலாவதி ஜெய்;
இப்போது கூட பெண் புகைப்படக் கலைஞர்கள் இந்தியாவில் அரிது. இப்போதே அப்படியென்றால் அரை நூற்றாண்டுக்கு முன் கேட்கவா வேண்டும்? இந்தியாவின் சுதந்திரப் போராட்டக் காலம் மற்றும் சுதந்திரத்திற்குப் பிந்தைய முக்கிய நிகழ்வுகளைத் தனது கேமராவால் ஆவணப்படுத்தியவர் ஹோமாய் வியாரவல்லா. குஜராத்தின் நவ்சாரியில் 1913 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 9-ம் தேதி பிறந்தார். இவர், இந்தியாவின் முதல் பெண் புகைப்பட பத்திரிகையாளர் என்ற பெருமைக்குரியவர். ;