விஜயானந்த லட்சுமி, எழுத்தாளர் மொழிபெயர்ப்பாளர் சென்னை ;
சுடர்ப்பூந் தோன்றி - கு.பா 90. சுடர் போல ஒளிரும் சிவந்த மலர் என்கிறது குறிஞ்சிப்பாட்டு. காந்தளில் ஒரு வகை என்கிறார்கள். செங்காந்தளையும் தோன்றியையும் தனித்தனியே கபிலர் வகை பிரித்திருக்கிறார். பசும்பிடி இள முகிழ், நெகிழ்ந்த வாய் ஆம்பல் கைபோல் பூத்த கமழ் குலைக் காந்தள் எருவை நறுந் தோடு, எரி இணர் வேங்கை உருவம் மிகு தோன்றி, ஊழ் இணர் நறவம் பருவம் இல் கோங்கம், பகை மலர் இலவம் - பரிபாடல் 19 பரிபாடலிலும் முல்லைப்பாட்டிலும் தனித்தனியாகவே குறிப்பிடப்படுகின்றன.;
