பி. விஜயலெட்சுமி கோகுலகிருஷ்ணன், நிறுவனர் மற்றும் பயிற்சியாளர், ஏகம் ஸ்கூல் ஆஃப் யோகா. ;
“நௌகா” என்ற சமஸ்கிருதச் சொல் “படகு” என்று பொருள்படும். ஆசன இறுதிநிலையில் , உடல் சமநிலையில் நிலைநிறுத்தப்பட்டு, நீரில் மிதந்து செல்லும் படகின் வடிவத்தை ஒத்திருப்பதால் நௌகாசனம் என்று பெயர் பெற்றது. நவீன யோகாசனப் பயிற்சி மரபின் முன்னோடியான திரு. டி. கிருஷ்ணமாச்சாரியார், தனது யோக மகரந்தம் நூலில் நௌகாசனத்தைப் பற்றியும், அதனை மூச்சுடன் ஒருங்கிணைத்துப் பயிற்சி செய்யும் முறையையும் விளக்கியுள்ளார். செய்முறை: 1) ஒரு விரிப்பின் மீது அமர்ந்து, இரு கால்களையும் முன்புறமாக நீட்டி,கைகளை உடலின் பக்கவாட்டில் தரையில் ஊன்றி, முதுகை நேராக வைத்து தண்டாசனம் நிலையில் அமரவும். பின்பு ஆழமாக மற்றும் நிதானமாக சுவாசத்தை உள்ளிழுக்கவும்.(படம்-1) ;
