கவிஞர் மு. முருகேசன்
இராமசாமியும் அவரது நண்பர் இலட்சுமணனும் காலையில் நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்தனர். காலையிலேயே வெயில் சுள்ளென அடித்தது. கொஞ்சம் களைப்பா இருக்கு. நிழலில் உட்காரலாம் என லட்சுமணன் சொன்னதற்கு இராமசாமி மறுப்பேதும் தெரிவிக்கவில்லை. அவர் அருகில் உட்கார்ந்தார். வெயிலுக்கு நிழல் இதமாக இருந்தது.
இலட்சுமணன் இராமசாமியிடம் மெல்ல, உங்கிட்ட முக்கியமாக ஒரு விஷயம் சொல்லணும்பா.. சில நாட்களாக நினைச்சிட்டு இருந்தேன். ஆனால் கொஞ்சம் தயக்கம். அதனால்தான் கேட்பதில் காலதாமதமாயிடுச்சு
என்னப்பா.. ஒரு தாய் பிள்ளையாய் பழகுகிறோம். நீ என்னுடன் படித்த நல்ல நண்பன்.. கேளு..
ஒண்ணுமில்ல.. என் மகன் ரவியின் போக்கு கொஞ்ச நாளாகச் சரியாக இல்லை..
என்னப்பா சொல்ற.. அதிர்ச்சியுடன் கேட்டார் இராமசாமி.