பதியம் ஜெபக்கனி;
அமைதியைத் தேடி நீண்ட தொலைவுக்கு நகர்ந்து விட்டோம் கண்டடைய முடியவில்லை. இதற்கானத் தடைகளை உருவாக்கியது யார்..? யோசித்தால், இத் தடைகள் நம் படைப்பே. மதங்களும் சாதிகளும் பதற்றத்தின் படியில் நம்மை நிறுத்தியிருக்கின்றன. கலவரங்கள் இங்கு இயல்பாகி போனது. மதங்கள் அமைதியைத் தானே தரவேண்டும்? சாதிகள் சமத்துவத்தைத் தானே போதிக்கவேண்டும்.. நம்மிடம் மதங்களும், சாதிகளும் நிறைய உள்ளனவே பின் ஏது தடை? கேட்கலாம் நீங்கள். ஆன்மிகத்தைத் மதங்கள் வழி தேடுகிறோம். நம் உயிர் காக்க குருதி தந்தவரின் சாதியை பார்ப்பதில்லை. ஆனால் கருவிலிருக்கும் குழந்தைக்கு சாதி சாயம் பூசுகிறோம். நம்மால் உருகொண்ட தடைகள் இவை.;