ஆசிரியர் ப.திருமலை, பட்டறிவுப்பதிபகம்..;
தமிழகத்தைப் பொறுத்தவரை கடந்த இரு மாத காலத்தில் அரிசி, சர்க்கரை, எண்ணெய் ஆகியவற்றின் விலையும் அதுபோல வெங்காயம் உள்ளிட்ட காய்கறிகள், மளிகைப் பொருள்கள், பழங்களின் விலையும் கணிசமாக அதிகரித்துள்ளது. இந்த அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை உயர்வால் ஏழை மற்றும் நடுத்தரக் குடும்பங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வை “சந்தையின் இயல்பான மாற்றம்” என்று மட்டும் கடந்து செல்ல முடியாது. உலகச் சந்தை, எரிபொருள், காலநிலை, உற்பத்தி, வரத்து குறைவு, போக்குவரத்து, பதுக்கல் எனப் பல காரணிகள் இணைந்தே விலையை நிர்ணயிக்கின்றன. எனவே அரசின் தலையீடும் நீண்டகாலத் திட்டமிடலும் அவசியம். ;