ஆசிரியர் ப.திருமலை, பட்டறிவுப்பதிப்பகம், மதுரை
பெருகிவரும் சுற்றுச்சூழல் சீர்கேடு, உணவுப்பழக்கத்தில் ஏற்பட்டிருக்கும் மாற்றம், புதிது புதிதாக உருவாகும் நுண்கிருமிகளின் பெருந்தொற்று நோய்கள் ஆகியவற்றால் இன்றைய சூழலில் ஒருவர் நோயின்றி ஆரோக்கியமாக இருப்பது என்பது மிகவும் சவாலாக உள்ளது. மருத்துவ சிகிச்சை மற்றும் மருந்துகளின் உதவியாலேயே பல பேருடைய வாழ்நாட்காலம் நீடித்து வருகிறது. இரத்த அழுத்தம், நீரிழிவு, ஆஸ்துமா போன்ற பல நோய்களுக்கான மருந்துகளை நீண்ட காலத்துக்கு, தினமும் பயன்படுத்த வேண்டிய கட்டாயம் உள்ளது. இந்த மருந்துகளின் விலையெல்லாம் குறைவாக இருந்தால் தான் ஏழை, எளிய, நடுத்தர மக்களால் வாங்கி பயன்படுத்த முடியும்.
கலைமாமணி, பேராசிரியர் முனைவர் கு.ஞானசம்பந்தன்
குட் மார்னிங் தாத்தா.. சொல்லி முடிக்கும் முன் கொட்டாவி வந்தது பேத்திக்கு. இப்பவெல்லாம் நைட்டில் சரியான தூக்கமே இல்லை தாத்தா.. இத்தனைக்கும் ஓ.டி.டியில புதுப் படம் பார்த்துட்டு கொஞ்சநேரந்தான் ரீல்ஸ் பார்த்தேன்... அப்படியே கொஞ்சநேரம் மீம்ஸ் பாத்திருந்தேனா விடிஞ்சிருக்கும்... பல்ல விளக்கி காபிய குடிச்சிருக்கலாம். படிச்சுட்டு, சாப்பிட்டதும் படுத்தா தூக்கம் வரும். அதவிட்டுட்டு தூக்கம் வரலையாம். அதோட உன் அறையில் இரவில் தூங்கும் போதும் அதிக வெளிச்சமுள்ள விளக்குகளைப் போட்டுக்கொண்டு தூங்குகிறாய். இரவில் இப்படி வெளிச்சமுள்ள விளக்குகளைப் போட்டுக்கொண்டு தூங்கினால் தூக்கம் தொலைந்து போய்விடும் என சீனாவைச் சேர்ந்த எஸ்.யு.எஸ்.டி., பல்கலை மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. அதுமட்டுமில்லாமல் எந்த நகரங்களில் இரவு நேரத்தில் அதிக வெளிச்சம் உள்ளதோ அங்கெல்லாம் தூக்கமின்மையால் அவதிப்படுபவர்கள் அதிகமுள்ளதாகவும் அந்த ஆய்வு சொல்கிறது. அதுசரி, உன் அறையில் எவ்வளவு நெகிழி குப்பைகள் சேர்ந்திருக்கு பார்த்தியா, மொதல்ல அப்படிச் சேராம பார்த்துக்கோ...