முனைவர் அ.சூரியகாந்தி
பேராசிரியர் (பணிநிறைவு)
மனைவியல் துறை, காந்திகிராம பல்கலைக்கழகம்
வாழ்க்கையின் பிரிக்க முடியாத ஓர் அங்கமாகச் செல்போன் ஆன பிறகு இப்படி ஒரு கேள்வி கேட்பது விசித்திரமாக இருக்கலாம். ஆனால் குழந்தை நலனில் தீவிர அக்கறையுள்ளவர்களின் மனதில் இயற்கையாகத் தோன்றும் கேள்விதான் இது. ஒரு வயதுக்கும் கீழே உள்ள குழந்தைகளிடம் கூடச் செல்போனை விளையாடக் கொடுத்துவிட்டுத் தங்கள் வேலைகளைப் பார்க்கும் தாய்மார்கள் பலர் இருக்கிறார்கள். பெரும்பாலான பெற்றோர்களுக்கு இந்தச் செயலால் குழந்தையின் மூளை வளர்ச்சி மட்டுமல்ல அதன் முழு வளர்ச்சியும் பாதிக்கப்படும் வாய்ப்பு உள்ளது என்பதை அறியாதிருக்கிறார்கள்.