எழுத்தாளர் அநுத்தமா சீனிவாசன்;
தமிழ்மொழியில் ‘ப” வரிசையில் பீ என்னும் ஒற்றை எழுத்து கூறும் பொருள் இன்றும் நடைமுறைப் பேச்சு வழக்கில் உள்ளது. கழிவு, மலம் என்ற பொதுவான பொருளோடு அச்சம் என்ற பொருளிலும் வரும். கோவில் கதவில் இடப்படும் முத்திரை பீக முத்திரையாகும். பீடரம் என்றால் கோவில், பீமம் என்றால் அச்சம், பருமன், பஞ்ச பாண்டவர்களுள் பருமனானவன் பீமன், எதிரிகளுக்கு அச்சம் தருபவன். பீமன் என்ற சொல் சிவபெருமானையும் குறிக்கும்.. பீமன் என்பவன் போர்வீரன் என்று பொதுவான பொருளில் வரும். பீமாதேவியோ துர்க்கையாவாள். ;
