திகழ்;
மனிதம் என்பது வேற்றுமையின்றி ஒரே இனமாக, குலமாக வாழும் வாழ்க்கையைக் குறிப்பதாகும். மனிதம் என்பது ஆண், பெண் என்ற பாகுபாடு இல்லாமல், மத வெறியை ஊட்டாமல், ஐாதி என்ற நோய் புரையோடாமல், மொழி வாதம் வாதிக்காமல், நாடு என்ற எல்லைக்கோடு இல்லாமல் செயல்படும் பண்பே மனிதம் எனப்படும். மனிதம் மேம்படப் பண்புகளும், அறநெறிகளும் மேம்பட வேண்டும். இக்காலத்தில், பொருளாதாரம் இந்த ஒற்றுமையைக் கொண்டு வருகிறது. ஆனாலும் பொருளாதார உயர்வு, தாழ்வு என்ற புதிய வேற்றுமை வேரூன்ற வழி வகுக்கின்றது. பல்லாயிரம் ஆண்டுகள், இப்பூமி பல உயிரினங்களால் இணைந்து, இசைந்து வாழும் சூழ்நிலை உருவாக்கி செயல்படுகின்றது. மனிதம் இவ்வுயிரினங்களின் ஒர் அங்கமாகும், அவைகளை மதித்து வேற்றுமை காட்டாமல் அவைகளின் அங்கமாக இயைந்து செயல்படுதல் மிக மிக அவசியம்.;
