சு. பரமேசுவரி ஆறுமுகம் குழந்தைச் செயல்பாட்டாளர் ;
விளையாட்டு என்றால் யாருக்குத்தான் பிடிக்காது, பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை மிகவும் விரும்பும் ஒரு பொழுதுபோக்கு அம்சம். இப்பொழுதும் குழந்தைகள் நவீன தொழில்நுட்பத்தின் உதவியுடன் கைப்பேசிகள் மூலம் அல்லது வீடியோ கேம் மூலமாக விளையாடுகிறார்கள். ஆனால், இதனால் உடல் ஆரோக்கியம் ஏற்படுவதற்குப் பதிலாக மனச்சோர்வு, மனஉளைச்சல் உள்ளிட்ட பாதிப்புகள்தான் அதிகம் ஏற்படுகின்றன. இப்பொழுது உள்ள சூழலில் குழந்தைகளை வெளியே அனுப்பி விளையாட வைப்பதற்கான சாத்தியக்கூறுகள் மிகவும் அரிது என்று நீங்கள் கவலை கொள்வது சரிதான். வீட்டிற்குள் இருந்தபடி பாதிப்புகள் எதுவும் ஏற்படாமல், மாறாக நமது கலாச்சாரம், உடல் ஆரோக்கியம், மற்றும் மன ஒருமைப்பாட்டை வளர்க்கும் வகையில் பல விளையாட்டுகள் உள்ளன. அவைதான் நம் பராம்பரிய விளையாட்டுகள்.;
