முனைவர் இரா. தனலெட்சுமி இனண பேராசிரியர், சரஸ்வதி நாராயணன் கல்லூரி, மதுரை. ;
ஒரு நாட்டின் உள்கட்டமைப்போ அல்லது பொருளாதார வளர்ச்சியோ மட்டும் அந்த நாட்டின் உண்மையான நாகரிகத்தை அளவிட்டுவிடாது. அந்த நாடு தன் மூத்த தலைமுறையை, தங்களுக்கு அடித்தளமிட்ட முதியவர்களை எவ்வளவு கண்ணியத்துடனும் பாதுகாப்புடனும் நடத்துகிறது என்பதைக் கொண்டே அதன் பண்பாடு அளவிடப்படுகிறது. தங்களின் இளமைக்காலம் முழுவதையும் குடும்பத்திற்காகவும், சமுதாயத்திற்காகவும், நாட்டின் வளர்ச்சிக்காகவும் அர்ப்பணித்த மூத்த குடிமக்களைப் போற்றுவதும், அவர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதும் அவசியமானதாகிறது.;
