வீ. வெங்கடேசன் வெளியீட்டாளர் நமது மண்வாசம்;
நமது பள்ளிப் பருவ வாழ்க்கையின் நீங்காத நினைவுகளில் ஒன்று ஆத்திச்சூடி. அவ்வையாரின் அறம் செய்ய விரும்பு என்று தொடங்கும் ஆத்திச்சூடியின் வரிகள், காலங்களைக் கடந்தும் நமது மனங்களில் ஒலித்துக்கொண்டே இருக்கின்றன. காலத்தின் தேவைக்கேற்ப மகாகவி பாரதி புதிய ஆத்திச்சூடியை இயற்றி, ஆத்திச்சூடி மரபுக்கு புதிய சிந்தனைப் பரிமாணத்தை வழங்கினார். அந்த மரபின் அடுத்தப் பரிணாமமாக, பாரதியைப் போற்றிய பாவேந்தர் பாரதிதாசன் 1963ஆம் ஆண்டு இளையார் ஆத்திச்சூடி என்னும் 88 அடிகள் கொண்ட நூலை இயற்றினார். இந்த இளையோர் ஆத்திச்சூடியின் எழுத்துகள் எளிமையாக இருந்தாலும், அதன் ஒவ்வொரு அடியிலும் ஒரு தலைமுறையைச் செதுக்கும் வாழ்வியல் தத்துவங்களும், உயர்ந்த ஆளுமையை உருவாக்கும் சிந்தனைகளும் பொதிந்துள்ளது. ;
