மீ.இராம சுப்பிரமணியன் பத்திரிகையாளர்;
நமது மண்வாசம் 12ஆவது ஆண்டு விழா மதுரை தானம் அறக்கட்டளையின் ஐக்கிய அலுவலகக் கூட்ட அரங்கில் 27.7.2026 அன்று நடைபெற்றது. ஆண்டு விழா என்பதைவிட இலக்கிய விழா எனச் சொல்லுமளவுக்கு விழாவில் 15 நூல்கள் வெளியிடப்பட்டன. டாக்டர் ராதா ருக்மணி எழுதிய நலம் நலமறிய (மருத்துவக் கேள்விப்பதில்) நூலினை டாக்டர் பி.எஸ். சண்முகம், முனைவர் இராணி சக்ரவர்த்தி எழுதிய பூக்காரம்மா (நாவல்) நூலினை விவசாயத்துறை முன்னாள் அதிகாரி எம். மொகரம் பீபி, அருள்நிதி பகவதி மோதிலால் எழுதிய வறுமையிலும் செம்மை (சிறுகதை) நூலினை ஆடிட்டர் கலாவதி ஜெய், காலப்பெட்டகத்தை பேராசிரியர் அனார்க்கலி, சி. இராமலக்ஷ்மி எழுதிய மாறுவோம் இல்லையேல் மாற்றப்படுவோம் நூலினை எழுத்தாளர் யுகா, பேராசிரியர் முனைவர் மோதிலால் நேரு எழுதிய மாமனிதர்களும் மனம் கவர்ந்த நாட்களும் (ஆளுமை கட்டுரைகள்) ;
