அமுதம்;
வீட்டில் இருந்தபடியே சம்பாதிக்க பெண்களுக்கு பல வழிகள் இருக்கின்றன! அவற்றில் ஒன்று தையல். தையல் தொழில் மிகவும் லாபம் தரக்கூடிய தொழில். பல அமைப்புகள் பெண்களுக்காக இலவச தையல் வகுப்புகள் நடத்தி வருகின்றன. பல மாவட்டங்களில் பெண்களுக்கான இலவச தையல் வகுப்புகள் மாவட்டத் தொழிலக பயிற்சி நிலையங்கள் (ஐ.டி.ஐ) மற்றும் சமூக நல மையங்கள் மூலம் நடத்தப்படுகின்றன. இதற்கான தகுதிகள் மற்றும் விண்ணப்ப முறைகள் என்ன என்று பார்ப்போம். தமிழ்நாடு சமூக நலத்துறை மற்றும் மாவட்ட தொழில் பயிற்சி மையங்கள் மூலம் கிராமப்புற மற்றும் நகர்புற பெண்களுக்கு இலவச தையல் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. பயிற்சிக்கான வயது வரம்பு பொதுவாக 18 வயது முதல் 35 வயது வரை நிர்ணயிக்கப்படுகிறது. ;
