விஜயானந்த லட்சுமி எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர் ;
குறுநறுங்கண்ணி (கு.பா 72), குறுநறுங்கண்ணி என்ற பெயர் குறிஞ்சிப்பாட்டில் மட்டுமே ஆளப்பட்டுள்ளது. குன்றி மணி மரங்களில் படரக்கூடியது. அதன் பூ சிறிய மணமுடன் பூங்கொத்தில் இருப்பதால், அதனை குறுநறுங்கண்ணி என்று கபிலர் குறிஞ்சிப்பாட்டில் சொல்கிறார். அதன் பூ நீல நிறத்தில் வரிகளுடன் கொத்துகளாகக் காணப்படுவதை , மணிப்பொறிக் குரலங்குன்றி என்று புறநானூறு காட்சிப்படுத்தியுள்ளது. (340) மலர்ந்த பூ, காயாகி முற்றிக் கொத்தில் வெடித்த நிலையில் விதை கீழே விழாமல் ஒட்டிக் கொண்டு இருக்கும். கீழே விழுந்த விதை தரையெங்கும் பரவியும் கிடக்கும். அவ்விதைக்குக் குன்றி (குறள்: 965) குன்றிவித்து (கந்தபுராணம்) என்று இலக்கியங்களில் சொல்லப்படுகிறது. குண்டுமணி, குன்னிமுத்து என்றும் பேச்சு வழக்கில் சொல்வார்கள்.;
