அமுதம் ;
எனக்கு தெரிந்த ஒரு தோழி படித்து வேலை பார்த்து கொண்டிருந்த பெண், கல்யாணம் முடிந்தும் வேலை பார்த்து கொண்டிருந்தாள். குழந்தைகள் பிறந்தவுடன் கணவருக்கு வெளிநாட்டில் வேலை கிடைக்க இவள் போக முடியாத சூழல். குழந்தைகளை பார்த்து கொள்ள சரியான ஆள் கிடைக்காமல் வேலையை விட்டு விட்டாள். ஆனால், பெண்களுக்கு சம்பாத்தியம் எவ்வளவு முக்கியம் அது வாழ்வில் எப்படியான மாற்றங்களை கொண்டு வரும் என்று கல்லூரியில் படிக்கும் போது பல மேடைகளில் பேசிய நாம் இப்படி இருக்கிறோமே என்ற வருத்தம் அவரிடம் இருந்தது. அப்படி ஒரு நாள் பக்கத்தில் வீட்டில் இருக்கும் ஒரு பெண்மணி இவளிடம் அவசரத்துக்கு குழம்பு பொடி கேட்டு வாங்கி போனாள். இரு தினங்களுக்கு பின்பு அவளிடம் உங்கள் வீட்டு குழம்பு மட்டும் எப்படி இப்படி மணக்கிறது. எங்கே வாங்கினாய் எனக் கேட்டாள்.;
