பரமேஸ்வரி ஆறுமுகம் குழந்தைகள் நலச் செயல்பாட்டாளர் ;
அழகிய மாலை பொழுது, எங்கள் வீட்டிற்கு அருகே உள்ள நடைபயிற்சி பூங்காவில் நடந்து கொண்டு இருந்தேன். 8 வயது நிரம்பிய ஒரு அழகான குழந்தையும், தாயும் என் முன்பாக நடந்து சென்று கொண்டிருந்தார்கள். குழந்தை தன் தாயாரிடம் உரையாடி கொண்டேடிருந்ததை எதேச்சையாக கேட்க நேர்ந்தது! இந்த நடைபாதை எத்தனை கிலோமீட்டர்? வாக்கிங் வர்ற எல்லோரும் அதை அளப்பதற்கான வாட்ச் கட்டவில்லையே ஏன்? என்ற மாதிரியான கேள்விகள்! அது கூட பரவாயில்லை. நம்ம பக்கத்து வீடடு ஆன்ட்டி ஏம்மா இவ்வளவு குண்டா இருக்கா..? அவ அவளது ஹஸ்பண்டுக்கு மேட்சாக இல்லையே? அந்த ஆள் மெலிந்து இருக்கான். சோறு போடமாட்டாளா..? அந்த குழந்தை தன் தாயாரிடம் உரையாடிய முறை எனக்கு உறுத்தலாக இருந்தது. குழந்தையின் கேள்விகள் வயதிற்கு மீறிய கேள்வியாகவே எனக்கு தோன்றியது! ;
