டாக்டர் செ இராமசுப்ரமணியன்;
உலக சுகாதார நிறுவனமும் WHO மனநலத்திற்கான உலகக் கூட்டமைப்பும் WFMH இணைந்து ஒவ்வோர் ஆண்டும் அக்டோபர் 10ஆம் தேதியை உலக மனநல தினமாகக் கடைப்பிடித்து வருகின்றன இது மனநல நோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான நாள் மட்டுமல்ல; அது சமுதாயத்தில் ஆழமாக வேரூன்றியுள்ள மூடநம்பிக்கைகளையும் அவப்பெயரையும் துடைத்தெறிய வழிகாட்டும் நாள். ஒருவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டால் அது அவரை மட்டுமே பாதிக்கிறது. ஆனால், மனநலப் பாதிப்பு என்பது சம்பந்தப்பட்ட நபரையும் தாண்டி, அவரைச் சார்ந்த குடும்பத்தினரையும், அவர்களின் அன்றாட வாழ்க்கை மற்றும் பொருளாதாரத்தையும் நிலைகுலையச் செய்கிறது. மனநலம் என்பது நோய் இல்லாத நிலை மட்டுமல்ல; அது ஒரு மனிதனின் உணர்ச்சி, உளவியல் மற்றும் சமூக நல்வாழ்வை உள்ளடக்கியதாகும்.;
