வீ. வெங்கடேசன், வெளியீட்டாளர், நமது மண்வாசம்;
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தைச் சார்ந்த பசுவிநாயனிப்பள்ளி கிராமத்தில் ஒரு சனிக்கிழமையன்று கண்ட காட்சி வியப்பேற்படுத்தியது. ஒட்டு மொத்த கிராமமே விழாக்கோலமாக காட்சியளித்தது. நாள் முழுவதும் பெண்கள் பூஜைப் பொருட்களுடன் கோவிலுக்கு செல்வதும் வருவதுமாக இருந்தனர். அது ஏதேனும் ஆண்டுக்கொருமுறை வரும் விசேஷ தினமா என்று விசாரித்தபோது கிராமத்தினர் இது வாரம் ஒருமுறை வரும் புனித நாள் என்றனர். அவர்களின் அடுத்த விளக்கம்தான் இன்னும் சிறப்பு. `எங்களது ஊரில் பல்வேறு சமூகங்களைச் சேர்ந்த சுமார் 202 குடும்பங்கள் உள்ளன. ஒவ்வொரு சனிக்கிழமையும் சுழற்சி முறையில் ஒரு குடும்பமானது பூஜைகள் மற்றும் அன்னதானத்திற்கான பொறுப்பு எடுத்துக் கொள்ளும். சாதி பாகுபாடின்றி அனைவருக்கும் இந்த வாய்ப்பு உண்டு. அன்று அவர்கள்தான் கோவிலின் தர்மகர்த்தா. சுழற்சி முறையில் அக்குடும்பத்திற்கு மறுமுறை வர சுமார் இரண்டரை ஆண்டுகள் முதல் மூன்று ஆண்டுகள் எடுத்துக் கொள்ளும் என்றனர். அக்கலாச்சாரத்தின் காரணம் பற்றிய கேள்விக்கு அவர்கள் அளித்த பதில் `இக்கலாச்சாரத்தின் மூலமாக மனித மனங்களை நாங்கள் இணைக்கிறோம். ;
