ஆடிட்டர் கலாவதி ஜெய்;
அதிகாலையிலிருந்து இரவு வரை வீட்டு வேலைகளைச் செய்வதில் நாட்களைக் கழிக்கும் ஒரு சாதாரணப் பெண்ணாக மட்டுமே இருந்தேன். சோர்வு, கட்டுப்பாடுகள் மற்றும் பயம் ஆகியவை நான் கனவு காண்பதைக் கூடத் தடைசெய்திருந்தது எனச் சொல்லும் அஞ்சு யாதவ் இன்றைக்கு ஒரு போலீஸ் அதிகாரி. அஞ்சு யாதவ் அரியான மாநிலம் துலேரா கிராமத்தில் 1988இல் பிறந்தவர். இவருடன் பிறந்தவர்கள் மூவர். பெற்றோருக்கு விவசாயம். மிகவும் ஏழ்மையான குடும்பம். கல்வியில் இவருடைய சகோதரருக்கு கிடைத்த, கொடுத்த வாய்ப்புகள் இவருக்குக் கிடைக்கவில்லை. காரணம் ஆண் என்பதே அதற்குக் காரணம். ;
