பி. விஜயலெட்சுமி கோகுலகிருஷ்ணன், நிறுவனர் மற்றும் பயிற்சியாளர், ஏகம் ஸ்கூல் ஆஃப் யோகா. ;
வக்ர என்றால் திருகுதல் என்று பொருள். இந்த ஆசனம் அமர்ந்த நிலை மற்றும் திருகு நிலை ஆசனம் ஆகும். ஆரம்பநிலை பயிற்சியாளர்களுக்கு ஏற்ற ஒரு எளிய மற்றும் அதிக பலன்கள் தரும் ஆசனம் ஆகும். செய்முறை: ஒரு விரிப்பின் மேல் அமர்ந்த நிலை ஆசனத்தின் தொடக்க ஆசனமான தண்டாசனத்தில் அமரவும். முதுகுப் பகுதியை நிமிர்த்தி கைகளை பக்கவாட்டில் இடுப்பிற்கு அருகில் நேராக வைக்கவும். சீரான அமைதியான இரண்டு மூன்று சுவாசங்களுக்கு பின் வலது காலை மெதுவாக மடித்து வலது கணுக்கால் இடது முழங்காலுக்கு அருகே இருக்குமாறு வைக்கவும். பின்பு வலது கையை வலது புறம் பின்புறமாக இடுப்பிற்கு அருகில் வைக்கவும்.;
