பி. விஜயலெட்சுமி கோகுலகிருஷ்ணன், நிறுவனர் மற்றும் பயிற்சியாளர், ஏகம் ஸ்கூல் ஆஃப் யோகா. ஜானு சிரசாசனம்;
ஜானு என்றால் முழங்கால் மூட்டு. சிரஸ் என்றால் தலை என்று பொருள். தலை பகுதி முழங்கால் மூட்டைத் தொடும் ஆசனம் ஆகும். ஆரம்ப நிலை பயிற்சியாளர்களுக்கு ஏற்ற எளிய, உடல் இறுக்கத்தை நீக்கி, நெகிழ்வுத் தன்மையை மேம்படுத்தும் ஆசனம் ஆகும். செய்முறை ஒரு விரிப்பின் மேல் அமர்ந்த நிலை ஆசனத்தின் தொடக்க ஆசனமான தண்டாசனத்தில் அமரவும். வலது காலை மெதுவாக மடித்து கைகளால் பிடித்துக் கொள்ளவும். வலது கால் பாதத்தை இடது தொடையின் உள்பகுதியில் வைக்கவும். ;
