வீ. வெங்கடேசன் வெளியீட்டாளர், நமது மண்வாசம்;
நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் ஒரு வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவர். அவரது தந்தை ஜானகிநாத் போஸ், ஒரு பிரபல வழக்கறிஞர், நேதாஜியை கௌரவமிக்க ஐ.சி.எஸ் (இந்திய சிவில் சர்வீஸ்) படிப்பில் சேர்க்க விரும்பினார். ஐ.சி.ஸ் என்பது இன்றைய ஐ.ஏ.ஸ் க்கு நிகரானது. பிரிட்டிஷ் காலத்தில், இந்திய சிவில் சர்வீஸ் (ஐ.சி.எஸ்) கல்வி இங்கிலாந்தில் வழங்கப்பட்டது, தந்தையின் விருப்பத்திற்காகவும், தனக்கும் பிடித்ததாலும் பு9பு9ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் சு0ஆம் தேதி நேதாஜி இங்கிலாந்து சென்று கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார். கடின முயற்சியுடன் படித்து நான்காமிடத்தில் ஐ.சி.எஸ் தேர்ச்சி பெற்றார். இதனிடையே ஆங்கில ஆட்சியாளர்களின் அராஜகங்களும், அத்து மீறல்களும் நேதாஜியின் மனதை வெகுவாக வருத்தியது. அவரின் சமூக உணர்வினைத் தூண்டியது. அடுத்த நகர்வு என்ன என்பதை அவருக்கு உணர்த்தியது. ;
