பி. விஜயலெட்சுமி கோகுலகிருஷ்ணன், நிறுவனர் மற்றும் பயிற்சியாளர், ஏகம் ஸ்கூல் ஆஃப் யோகா. ;
வடமொழியில் ‘அர்த்த’ என்றால் ‘பாதி’ ‘கடி’ என்றால் ‘இடுப்பு’ என்று பொருள். இந்த ஆசனத்தில் உடல் இடுப்புப் பகுதியில் இருந்து பக்கவாட்டில் வளைவதால், இதற்கு அர்த்த கடி சக்ராசனம் என்ற பெயர்.ஆங்கிலத்தில் இது Half Waist wheel pose என்று அழைக்கப்படுகிறது. அர்த்த கடி சக்ராசனம் இடுப்புப் பகுதிக்கு நல்ல பலத்தைக் கொடுப்பதுடன், அங்கு தேங்கியுள்ள அதிகப்படியான கொழுப்பை குறைக்க உதவுகிறது. உடலின் பக்கவாட்டு தசைகள் நன்றாக நீளமடைந்து, உடல் நெகிழ்வுத்தன்மையும் சமநிலையும் மேம்படுகின்றது.;
