அழ. சோமசுந்தரம்;
இன்றைய உலகம் பொருளாதாரத்தை மையப்படுத்தியதாகிவிட்டது. பணம் இருந்தால்தான் சொந்தங்கள் மத்தியில்கூட நமக்கு மதிப்பு. பொருளில்லாத நமக்கு யாருமில்லை என நான் முடிவுக்கு வந்தநிலையில் யாமிருக்க பயமேன் என ஆதரவு கரம் நீட்டியது களஞ்சியம்தான். என்னுடைய சிரமத்தில் பங்கேற்று ஆறுதல் சொன்னது களஞ்சியத்தில் உள்ளவர்கள்தான். களஞ்சியம் என்பது பொருளாதாரத் தேவைக்கு மட்டுமல்ல கடின நேரத்திலும் ஒரு உற்ற நண்பனைப்போல உறுதுணையாக இருப்பது என நான் உணரமுடிந்த தருணங்கள் ஏராளம். என்கிறார் சந்திரா. தஞ்சாவூர் தட்சன்குறிச்சியில் பிறந்தவர் சந்திரா. இவரது தாயார் தங்கமணி, அப்பா பால்ராஜ். இவருடன் பிறந்தவர்கள் இரண்டு சகோதரர்கள். சந்திராவுக்கு குடும்பத்தினர் எந்த சிரமங்களையும் கொடுப்பதில்லை. விளையாடுவது சாப்பிடுவது தூங்குவது இதுவே இவரது சிறுபருவ வாழ்க்கையாக இருந்தது. ;
