பி. விஜயலெட்சுமி கோகுலகிருஷ்ணன், நிறுவனர் மற்றும் பயிற்சியாளர், ஏகம் ஸ்கூல் ஆஃப் யோகா. ;
சேது பந்தாசனம் குறித்துப் பார்ப்போம். “சேது” என்றால் பாலம் என்றும், “பந்தா” என்றால் பிணைப்பு / பூட்டு என்றும் பொருள்படும். இந்த ஆசன நிலையில் உடல் ஒரு பாலம் (bridge) போல வளைந்து காணப்படும்.உடல் நிலையில் மட்டும் அல்ல ,மனம் மற்றும் ஆன்மாவை இணைக்கும் ஒரு உள்ளார்ந்த பாலத்தையும் உருவாக்குகிறது. தொடக்க நிலை பயிற்சியாளர்களுக்கு ஏற்ற பின்புறம் படுத்து செய்யப்படும் பின்வளைவு ஆசனம் ஆகும். மேலும் எல்லா நிலை பயிற்சியாளர்களும் அதீதமான பின்வளைவு ஆசனங்கள் செய்வதற்கு முன் இதனை ஆயத்த பயிற்சியாக செய்வது சிறந்தது. மற்றும் கழுத்து, தோள்பட்டை மற்றும் தொடை தசைகளை வலுப்படுத்த உதவும் ஒரு அடிப்படை ஆசனம் ஆகும்.;
