வீ. வெங்கடேசன் வெளியீட்டாளர், நமது மண்வாசம்;
கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட்டன. குழந்தைகள் உற்சாகத்துடன் வகுப்பறைக்குள் வந்தனர். ஆறாம் வகுப்பு ஆசிரியை புன்னகையுடன் அனைவரையும் வரவேற்று, “இந்த விடுமுறையில் உங்களுக்கு மிகவும் மகிழ்ச்சி அளித்த தருணம் எது?” என்று கேட்டார். மாணவ மாணவிகள் ஒருவருக்கொருவர் போட்டி போட்டு பேசத் தொடங்கினர். “ஊட்டிக்கு டூர் போனது”, “புதிய செல்போன் வாங்கினது”, “பார்க்குக்கு போனோம்”, “சினிமா பார்த்தோம்” என்று ஒவ்வொருவரும் தங்களது அனுபவங்களை உற்சாகமாக பகிர்ந்தனர். வகுப்பு முழுவதும் சத்தமும் சிரிப்பும் நிரம்பியது. சிரிப்பும் குதூகலமும் நிறைந்த அந்த நேரத்தில், அமைதியாக இருந்த அச்சிறுமியை ஆசிரியை கவனித்தார். ‘நீ என்ன சொல்றே?’ என்று மெதுவாக கேட்டார். ;
