வீ. வெங்கடேசன், வெளியீட்டாளர் நமது மண்வாசம்;
சென்ற வருடம் கோடை விடுமுறையின்போது ஒரு மாலை நேரம் எனது நண்பர் டேவிட் வீட்டிற்குச் சென்றிருந்தேன். அம்மா, அப்பா, மகன், மருமகள், பேரன், பேத்திகள் என 10 நபர்கள் நிறைந்த கூட்டுக் குடுமபம் அது. மாலை நேரம் என்பதால் தொலைக்காட்சி சீரியல் நாடகங்களை பெண்கள் பார்த்துக் கொண்டிருப்பார்கள், குழந்தைகள் செல்போனில் விளையாடிக் கொண்டிருப்பார்கள் என்ற அனுமானத்தில் வீட்டிற்குள் நுழைந்தேன். ஆனால் அந்த அனுமானம் பொய்யாகி விட்டது. வீட்டுப் பெண்கள் சமயலறையில் புதிய பதார்த்தம் ஒன்றை முயற்சித்துக் கொண்டிருந்தாரகள். தாத்தா பாட்டி குழந்தைகளுக்கு கதை சொல்லிக் கொண்டிருந்தார்கள். டேவிட் மற்றும் அவரது சகோதரர் எல்லோரையும் கவனித்து, சிரித்துக் கொண்டு அவர்களுடன் உரையாடிக் கொண்டிருந்தார்கள்.;
