வழக்கறிஞர் சி.சே.இராசன் தலைவர், சமம் குடிமக்கள் இயக்கம்;
கிரேக்கச் சொல்லான டெமாக்ரஸியின் பொருள், ‘மக்களால் ஆளப்படுவது’ என்பதுதான். கி.மு. 4ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த கிரேக்கத் தத்துவவியலாளர் அரிஸ்டாட்டில் தனது ‘Politics’ என்ற புத்தகத்தில் ஜனநாயகம் குறித்துப் பேசியிருக்கிறார். கி.மு. 5ஆம் நூற்றாண்டில் கிரேக்க வரலாற்றறிஞர் ஹெரோடிடஸ், ஏதென்ஸில் ஜனநாயக ஆட்சி நடைபெற்றது பற்றித் தனது ‘‘Histories’’ நூலில் பதிவு செய்திருக்கிறார். தாமஸ் பெயின், அகஸ்டேகாம்டே, ஜான் ஸ்டூவர்ட் மில் உள்ளிட்ட பல சிந்தனையாளர்கள் ஜனநாயகம் என்கிற கருத்தாக்கம் பரவுவதற்கு உழைத்தனர். கி.பி. 18ஆம் நூற்றாண்டில் மேற்கத்திய நாடுகளில் ஜனநாயகம் பரவத் தொடங்கியது குறித்து ஜவஹர்லால் நேரு தனது ‘Glimpses of World History’ (1934) நூலில் விரிவாகவே பேசியிருக்கிறார்.;
