பேராசிரியர் முனைவர் ம.சாலமன் பெர்னாட்ஷா பேராசிரியர் முனைவர் P. முத்துக்குமரன்;
மனிதனின் அதிமுக்கியக் கண்டுபிடிப்பு சக்கரமாகும். அது மெசபடோமியாவில் - இன்றைய ஈராக்கில் கி.மு. 3500 ஆண்டுவாக்கில் கண்டுபிடிக்கப்பட்டது. குயவனின் சக்கரத்திலிருந்து போர்க்களத்தில் பயன்படும் தேர்கள் வரை இவை பயன்படுத்தப்பட்ட போதிலும் ‘மனிதன் கண்டுபிடித்த ஒப்பற்ற இயந்திரம்”, என்றும் ‘பசுமை இயந்திரம்”, என்றும் போற்றப்படுவது இன்றளவும் சாமானியர்கள் பயன்படுத்தும் மிதிவண்டியேயாகும். குழந்தைப் பருவத்தில் மூன்று சக்கரம் பின் இருசக்கர மிதிவண்டி மீது மோகம் கொண்டிராத இளம்பிராயம் எவருக்கும் இருந்திருக்க வாய்ப்பில்லை. என் இளம்பிராயத்தில் மின்சாரமும் சாலையுமில்லாத மலையோரக் கிராமத்தினுள் வயது போகும் ரதங்கள் இவை. அரைக்கால் டவுசர் அணிந்த எஸ்.ஐ. கார்மேகம் எப்பொழுதாவது வரும் அடர்பச்சை, முழு செயின்கவர், மஞ்சள் துணி கட்டிய டூம், டைனமோ ராலே சைக்கிள் கனவுகளில் வரும். ;
