பி. விஜயலெட்சுமி கோகுலகிருஷ்ணன், நிறுவனர் மற்றும் பயிற்சியாளர், ஏகம் ஸ்கூல் ஆஃப் யோகா. ;
இந்த ஆசனமானது நின்ற நிலை ஆசனங்களின் அடிப்படை மற்றும் தொடக்கநிலை ஆசனம் ஆகும். உடலுக்கும் மனதுக்கும் புத்துணர்ச்சி ஊட்டும் ஒரு பக்க வளைவு ஆசனம் ஆகும், திரிகோண என்றால் முக்கோணம் மற்றும் ஆசனம் என்றால் நிலை. இந்த யோகாசனமானது முக்கோண நிலையில் இருப்பதால், இது திரிகோணாசனம் என்று அழைக்கப்படுகிறது. செய்முறை: 1) ஒரு விரிப்பின் மேல் நின்ற நிலை ஆசனத்தின் தொடக்க ஆசனமான சமபாத ஆசனத்தில் நிற்கவும். 2) கைகளை கூப்பிய நிலையில் மார்பின் முன்(நிலை-1) வைக்கவும். 3) சுவாசத்தை உள் இழுத்தவாறு இரு கைகளையும் பக்கவாட்டில் உயர்த்தி, கால்களையும் அகலமாக விரித்து வைத்து நிற்கவும்,உள்ளங்கைகள் கீழ்புறம் பார்த்தவாறு வைக்கவும்(நிலை-2) ;
