அழ சோமசுந்தரம்;
வறுமை என்பது அகற்றக்கூடியதுதான்.. இன்னும் சொல்லப்போனால், விரட்டக்கூடியது என்பதை தானம் அறக்கட்டளையின் களஞ்சியம் சுய உதவிக்குழுவின் பெண்கள் நிருபித்தவாறே இருக்கிறார்கள். தன்னம்பிக்கைக்கு தன்னிகரற்ற தளகர்த்தர்கள் இந்தப் பெண்கள். ஆண்டிப்பட்டியைச் சேர்ந்த சாந்தி. இவர் விடியல் களஞ்சியக் குழுவினைச் சேர்ந்தவர். அப்பாவும், அம்மாவும் விவசாயக் கூலிகள். பெற்றோர் வேலைக்குச் சென்று வந்தால்தான் அன்றைய தினம் சாப்பாடு என்கிற நிலை. இந்த வேலையும் நிரந்தரமில்லை. தினமும் சாப்பாடு கிடைக்கும் என்ற உத்ரவாதமும் இல்லை. அந்த நிலையில் சாந்திக்கு பள்ளிக்கூடம் செல்வது அவ்வளவு எளிதாக இல்லை. ஐந்தாம் வகுப்போடு தன் பள்ளி படிப்புக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.;
