சி. இராமலட்சுமி உதவி இயக்குநர் (பணிநிறைவு), முன்னாள் படைவீரர் நலத்துறை.;
சூரியனும் சந்திரனும் போல், ஆண்களும் பெண்களுமாய் அகிலமே இயங்குகிறது. ஆயிரமாயிரம் வருடங்கள் முன்பிருந்தே இந்த சமூக நலனிற்காக பெண்களின் பங்களிப்பு தொடர்ந்து இருந்து கொண்டே இருக்கிறது. சமூகத்தில் ஒரு புறம் பெண்ணடிமை, சம உரிமையென நாம் எல்லாம் பேசிக் குறைபட்டுக் கொண்டிருந்தாலும், எல்லா சமூகச் சூழ்நிலைகளிலும், பல இறுக்கமான கட்டங்களிலும் பெண்கள் சாதித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். சங்க கால மகளிரிலிருந்து சமகால மகளிர் வரை பெண்களின் சாதனைகள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன. ;
