ஆசிரியர் சிதம்பரம் இரவிச்சந்திரன்;
ஒவ்வொரு பறவையிடமிருந்தும் நாம் கற்றுக்கொள்ள வேண்டிய விஷயங்கள் எவ்வளவோ உள்ளன. ஐரோப்பா, ஆசியா, ஆப்பிரிக்காவைப் பூர்வீகமாகக் கொண்ட, சூரைக் குருவி அல்லது நாகன வாய் புல் என்று அறியப்படும் ஸ்டார்லிங் (ஷிtணீக்ஷீறீவீஸீரீ) பறவைகள் ஒரு இடத்தில் தங்களுக்கு அச்சுறுத்தல் இருப்பதாக உணரும் பட்சத்தில், இந்த பறகைகள், ஒரே நேரத்தில் மரங்களில் இருந்து வானில் எழும்பி பறக்கும். தங்களை தாக்க முடியாத அளவு ஒன்று சேர்ந்த ஒரு பெரிய உருவத்தை வானில் காட்டியப்படி பறக்கும். எதிரிகளிடம் இருந்து தப்புவதற்காக மட்டுமின்றி, இரவு நேரங்களில் தங்களை கதகதப்பாக வைத்திருப்பதற்கும், இந்த பறவைகள் இவ்வாறு பறக்கின்றன. குளிர்காலங்களில் ஆயிரக்கணக்கான பறவைகள் நெருக்கமாக பறக்கும் போது, அவற்றின் உடல் சூடு அவற்றை கதகதப்பாக வைத்திருக்கின்றது. ஐரோப்பா பகுதிகளில் குளிர்காலங்களில் இந்த பறவைகள் கூட்டங்களின் அதிசய வடிவங்களை காண்பது என்பதே அங்குள்ள மக்களின் பொழுது போக்காக இருக்கிறது.;
