ஆடிட்டர் கலாவதி ஜெய்;
பிரதமர் மோடியுடன் பேசிக்கொண்டிருந்தபோது, நீண்டநாள் நண்பரிடம் பேசும் உணர்வை பெற்றேன் எனச் சொன்ன சிம்ரன் ஷர்மா, மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் 1999ஆம் ஆண்டு நவம்பர் 9ஆம் தேதி தில்லி பூராரி மாவட்டத்தில் பிறந்தவர். இவரது தந்தை மனோஜ் தாய் சவிதா ஷர்மா. இருவர் உழைத்தாலும் கூட பல நாட்கள் பட்டினியுடன் வாழ்ந்தார்கள். சவிதா ஷர்மா, கருவுற்று ஆறு மாதங்களில் குறை பிரசவமாகப் பிறந்தார் சிம்ரன். அடுத்த ஆறு மாதம் இங்குபேட்டரில் வைக்கப்பட்டு உயிருக்குப் போராடிக்கொண்டிருந்தார். உயிர்பிழைத்து வீடு திரும்பிய பிறகுதான், இவருக்கு ஆறு அடி தொலைவக்கு மேல் உள்ளவற்றை பார்க்கமுடியாது என்பதை அறிந்த பெற்றோர் அதிர்ந்தனர். ;
