பி. விஜயலெட்சுமி கோகுலகிருஷ்ணன், நிறுவனர் மற்றும் பயிற்சியாளர், ஏகம் ஸ்கூல் ஆஃப் யோகா. ;
கோ என்றால் பசு, முகா என்றால் முகம், இந்த ஆசனத்தில் மடக்கப்பட்டுள்ள கால்கள் பசுவின் வாய் போலவும், உயர்த்தப்பட்டுள்ள முழங்கைகள் பசுவின் காதுகளைப் போன்ற வடிவத்தையும் தருகின்றன. எனவே பசுவின் முக தோரணை ஆசனம் என்று அழைக்கப்படுகின்றது. அமர்ந்த நிலையில் பயிற்சி செய்யப்படும் எளிய ஆசனம் மற்றும் முதுகெலும்பை நீட்டுதல், மூலமாக முழு உடலின் தோற்ற மேம்பாட்டிற்கும் பயனுள்ளதாக இருப்பதால், தொடக்கநிலை பயிற்சியாளர்களுக்கும் ஏற்றது. செய்முறை: 1) ஒரு விரிப்பின் மேல் கால்களை நீட்டி நேராக தண்டாசனத்தில் (படம்1)அமரவும். 2) இரண்டு, மூன்று அமைதியான ஆழ்ந்த சுவாசத்திற்குப் பிறகு,வலது காலை மடக்கி, கைகளால் சுற்றி பிடிக்கவும்.(படம்-2);
