சி. கார்த்திகேயன், பாரம்பரியம் மற்றும் மேம்பாட்டிற்கான சுற்றுலா மையம், தானம் அறக்கட்டளை;
இன்றைக்கு, சுற்றுலா என்பது காட்சிகளைக் காண்பதற்காக என்ற நிலை மாறி, அனுபவத்தைத் தேடும் பயணமாக அமையத் துவங்கியிருக்கிறது. தற்போது, கிராமத்தின் வாழ்வியலை அறிந்து கொள்ள, மக்களின் கதைகளை கேட்க, பசுமை நிறைந்த நிலங்களில் காலார நடந்து அவர்களின் வாழ்க்கை முறையை உணர மக்கள் விரும்புகிறார்கள். இதுதான் அர்த்தமுள்ள பயணமாக இருக்கும் என அவர்கள் நம்புகிறார்கள். இந்த மாற்றமே இப்போது “அனுபவ சுற்றுலா”வாகப் பிறப்பெடுத்துள்ளது. இந்த மாற்றத்தை தமிழகத்தில் சமூக அடிப்படையில் செயல்படுத்தும் முயற்சி தான் தானம் அறக்கட்டளையின் “மக்கள் நிறுவனங்கள் வழிநடத்தும் அனுபவ கிராம சுற்றுலா வலையமைப்பு (ETN-TN)”. இது சுற்றுலாவை ஒரு சமூக மேம்பாட்டுக் கருவியாக மாற்றுகிறது. அதில் கிராம மக்கள் தான் செயல்பாட்டாளர்கள். ;
