பத்திரிகையாளர் பெருமாள் மைந்தன்;
ஒவ்வொரு ஆண்டும் உலகளவில் 80 லட்சத்துக்கும் அதிகமான பேர் புகைபிடித்தலால் இறந்து போகிறார்கள். இதில் என்ன கொடுமை என்றால், இந்த இறப்பவர்கள் லிஸ்டில் 5 லட்சம் பேர் புகைப்பிடிக்காதவர்கள். புகைபிடிப்பாளர்கள் வெளியிடும் புகையைச் சுவாசித்தவர்கள். புகைபிடிப்பாளர் அருகில் உட்கார்ந்திருந்தவர்கள். அடுத்துள்ளவரையும் கெடுக்கிறது புகை. புகையிலையில் அதிகப் போதைத் திறன் கொண்ட பொருளான நிகோடின் உள்ளது. இதுமிகவும் ஆபத்தானது என்று 2014ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட ஓர் ஆய்வில் போதைப்பழக்கம் மற்றும் நடத்தை மருந்தியல் ஆராய்ச்சியாளர் லெ ஃபோல் மீண்டும் உறுதி செய்தார். எவ்வளவு ஆபத்து என்றால் 60 மி.கிராம் நிகோடினை ஒரேநேரத்தில் உட்கொண்டால் ஆரோக்கியமான மனிதனாக இருந்தாலும் அவுட். இந்த நிக்கோடின்தான் புகைபிடிக்கும் ஆர்வத்தைத் தூண்டுகிறது. இது புகைபிடிப்பவர்களின் மனநிலையைத் தற்காலிகமாக உற்சாகப்படுத்துகிறது. ;
