டாக்டர் ராதா ருக்மணி, சக்தி மருத்துவமனை, மதுரை;
இந்தியாவில் பெண்களின் ஆரோக்கியத்திற்கு மிகப்பெரிய சவாலாக உருவெடுத்துள்ள நோய்களில் மார்பகப் புற்றுநோய் முதன்மையான ஒன்றாகும். இன்று பெண்களிடம் கண்டறியப்படும் புற்றுநோய்களில் இது முதலிடத்தில் உள்ளது. பெண்களுக்கு அதிகமாக வரக்கூடிய புற்றுநோய்களில் (1) கர்ப்பப்பை வாய் புற்றுநோய் (2) மார்பகப் புற்றுநோய் ஆகிய இரண்டும் ஆகும். சமீப காலமாக மார்பகப் புற்றுநோயானது, பெண்களிடையே கண்டறியப்படும் மொத்த புற்றுநோய் வழக்குகளில் 28 சதவிகிதமாக உள்ளது. கர்ப்பப்பை புற்றுநோயை விட அதிகமாக காணப்படுகிறது. இதற்குக்காரணம், கர்பப்பைவாய் தடுப்பூசியால் கர்ப்பப்பைவாய் புற்றுநோய் குறைந்து வருவதும் மற்றும் மார்பக புற்றுநோயைக் கண்டறியும் (Diagnostic Methods) விழிப்புணர்வு அதிகரித்திருப்பதும் கூட காரணமாகும். ;
