டாக்டர் ஃபரூக் அப்துல்லா பொதுநல மருத்துவர், சிவகங்கை.;
நமது உடலின் சலவைக்காரர்களாக செயல்படுபவை நமது நுரையீரல்கள். இவை நமது இரத்தத்தில் உள்ள கார்பன் டை ஆக்சைடை வெளியேற்றி விட்டு ஆக்சிஜனை மீண்டும் இரத்தத்தில் ஏற்றும் வேலையை பிறப்பு முதல் இறப்பு வரை தொடர்ந்துத் தொய்வின்றி நமது நுரையீரல்கள் செய்து வருகின்றன. இந்த நுரையீரலில் உள்ள செல்கள் கட்டுப்பாட்டின்றி வளர்ச்சி அடையும் போது புற்று நோய் உண்டாகிறது. உலக அளவில் கண்டறியப்படும் புற்று நோய்களில் முதலிடத்தில் இருப்பது நுரையீரல் புற்று நோய் ஆகும். வருடந்தோறும் 1 மில்லியன் மரணங்களுக்கு மேல் ஏற்படுத்தும் கொடிய நோயாக - நுரையீரல் புற்று நோய் உள்ளது. ;
