டாக்டர் ராதா ருக்மணி மகப்பேறு மருத்துவ நிபுணர் சக்தி மருத்துவமனை, மதுரை.;
கிராமத்தில் எனது பக்கத்து வீட்டுப் பாட்டிக்கு மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்கும். கூடவே விசில் சத்தமும். (நீங்கள் நினைக்கும் விசில் சத்தம் அல்ல). விறகு அடுப்பில் கருப்பட்டி காப்பி போட்டு அதை ஒவ்வொரு மடக்காக விழுங்குவார். பின்னர் மேஜை மீது இரண்டு மூன்று தலையணைகளை அடுக்கி வைத்து அதன்மீது தலை சாய்த்துக் கொள்வார். பாட்டிக்கு என்னம்மா? அம்மாகிட்ட கேட்டேன். ஆஸ்த்துமா என்றார்கள். ஆஸ்துமா என்பது ஒரு நாள்பட்ட நோயாகும். இதில் சுவாச மூச்சுக்குழல்கள் சுருங்கி, வீங்கி அதிகப்படியான சளியை உண்டாக்குகின்றன. இது சுவாசப்பாதைகள், ஒவ்வாமை மற்றும் எரிச்சலூட்டும் காரணிகளுக்கு ஆட்பட்டு எதிர்வினையாற்றும் போது உட்புறச்சவ்வு வீங்கி, அழற்சியடைகிறது. சுவாசப்பாதைகளை சுற்றியுள்ள தசைகள் இறுக்கமடைகின்றன. மற்றும் அதிகப்படியான சளி உற்பத்தியாகி, சளி அடைப்புகள் ஏற்படுகின்றன.;
