டாக்டர் ராதா ருக்மணி மகப்பேறு மருத்துவர், சக்தி மருத்துவமனை, மதுரை.;
வளரிளம் பருவத்தை, ‘‘உளவியலுக்கும் பாலியலுக்கும் இடையிலான இழுபறிக் கட்டம்’’ என விவரிக்கிறார் ஃப்ராய்டு. ‘‘ஒருவர் தன்னை அடையாளம் காணவும் புரிந்துகொள்ளவும் முயல்கிற பருவம்’’ என்கிறார் எரிக் எரிக்சன் என்ற உளவியலாளர். பதின்ம வயது ஆண்டுகள் எல்லாச் சமூகங்களிலுமே பிரச்சனைகளை உண்டாக்குவதாகவே இருக்கின்றன என்பதனை நிராகரிக்கமுடியாது. 1. பதின்ம பருவ மூளை வளர்ச்சி மாற்றங்கள் யாவை? மனித மூளை 5 வயதிற்குள் 90 சதவிகித வளர்ச்சியை எட்டிவிடும். பதின்ம பருவத்தில், நரம்பிலை வளைப் பின்னல்களால் விரிவான வளர்ச்சியை அடைகிறது. இதன் தொடர்ச்சி தண்டுவட நரம்பிழையையும் இணைத்து செய்திகளை மிக விரைவாக பதிவிடவும், கடத்தவும் செய்து மிகப்பெரிய மாற்றத்தை உண்டாக்குகிறது. ;
