டாக்டர் ராதா ருக்மணி மகப்பேறு மருத்துவர், சக்தி மருத்துவமனை, மதுரை;
1. பதின்மப் பருவ பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் பிரச்சனைகள் எவை? ஒழுங்கற்ற மாதவிடாய், அதிகப்படியான இரத்தப்போக்கு, மிகக்குறைந்த இரத்தபோக்கு, மிகுந்த வலியுடன் கூடிய மாதவிடாய் ஆகியன பதின்மப் பருவ பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய்ப் பிரச்சனைகளாகும். 2. ஒழுங்கற்ற மாதவிடாய் என்றால் என்ன? நீண்ட இடைவெளிக்குப்பின் மாதவிடாய் ஆகுதல், மிகக் குறைந்த இடைவெளியில் மாதவிடாய் ஆகுதல். உதாரணம் 15-20 நாட்களுக்கு ஒருமுறை (Polymenorrhea). மிக நீண்ட நாட்களுக்கு (2-3 மாதங்கள்) மாதவிடாய் வராமல் இருத்தல் (Amenorrhea) ;
