கே.பி. பாரதி மேம்பாட்டுக்கான சுற்றுலா ஆர்வலர் தானம் அறக்கட்டளை;
இராமநாதபுரம் மாவட்டம், தனக்கென்ற வரலாற்றுச் சிறப்புடன் தென்இந்தியாவின் கலாச்சார மையமாக திகழ்கிறது. இது கி.பி 1910ஆம் ஆண்டில் மதுரை மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களின் சில பகுதிகளை இணைத்து உருவாக்கப்பட்டது. பின்னர் கி.பி1985ஆம் ஆண்டில் இராமநாதபுரம், சிவகங்கை மற்றும் விருதுநகர் என மூன்று தனிமாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டது. புவியியல் ரீதியாக இம்மாவட்டம் வடக்கே சிவகங்கை மாவட்டத்தாலும், வடகிழக்கே புதுக்கோட்டை மாவட்டத்தாலும், கிழக்கே பாக் ஜலசந்தியாலும் தெற்கே மன்னார் வளைகுடாவாலும், மேற்கே தூத்துக்குடி மாவட்டத்தாலும், வடமேற்கே விருதுநகர் மாவட்டத்தாலும் சூழப்பட்டுள்ளது.;