பிரான்ஸ் வடிவமைத்த கமுதிக்கோட்டை கே.பி.பாரதி மேம்பாட்டுக்கான சுற்றுலா ஆர்வலர் தானம் அறக்கட்டளை;
தமிழ்நாட்டில் சங்க காலத்தில் அரசியல் அடிப்படையில், குறிப்பிட்ட அரச மரபினர் ஆண்ட பகுதிகள் சேரநாடு, சோழநாடு, பாண்டியநாடு என்றும் கொங்குநாடு, தொண்டைநாடு என்றும் அழைக்கப்பட்டன. இவை பெருநிலப்பரப்பை கொண்ட நாட்டுப்பிரிவுகள் ஆகும். வேளிர்களும், சிற்றரசர்களும் ஆண்ட சிறுநிலப் பரப்பை கொண்ட நாடுகளும் சங்க காலத்தில் இருந்துள்ளன. தொடர்ந்து ஆண்ட விஜயநகர, நாயக்கர், ஆற்காட்டு நவாப்புகளும் தங்களுடைய பகுதியை பாதுகாத்துக் கோட்டைகள் கட்டி ஆண்டு வந்ததை நாம் நன்கு அறிவோம். கோட்டை என்பது பாதுகாப்புக் காரணங்களுக்காகக் கட்டப்படும் கட்டிடத் தொகுதியாகும். இந்தக் கோட்டைகள் ஒரு பிரதேசத்தில் ஆட்சியை நிறுவவும் பயன்படுகிறது. அரசர் முதலிய முக்கிய மனிதர்கள், மற்றும் முக்கியத்துவம் வாய்ந்த செயல்பாடுகளைப் பாதுகாக்க கோட்டைகள் கட்டப்பட்டன. சில கோட்டைகள் முக்கியமானவர் தங்கும் இடங்களுடன், போர் வீரர்களுக்கான வசதிகளும், சில அரச அலுவலங்கள் மட்டுமே அமைந்திருந்தன. ;