கே.பி. பாரதி மேம்பாட்டுக்கான சுற்றுலா ஆர்வலர்;
புதுச்சேரி யூனியன் பிரதேசம் ஒரு செழிப்பான, வளமான, பன்முகத்தன்மை கொண்ட கலாச்சாரத்தை உள்ளடக்கியது என்பதனை நாம் அறிவோம். புதிய குடியேற்றத்திற்கு (புதுச்சேரி) பிரான்சு நாட்டின் அயலக விளக்கமாக பாண்டிச்சேரி என்ற பெயர் ஏற்பட்டிருக்கலாம் என்று நம்பப்படுகிறது. பாண்டிச்சேரி நகருக்கு தெற்கே 7 கி.மீ. தொலைவில் உள்ள அரிக்கமேடு அகழ்வராய்ச்சி நிகழ்வு, முதலாம் நூற்றாண்டு முதலே ரோமானிய வணிகம் இங்கு செழிந்தோங்கியதை உறுதி செய்கிறது. இங்கு சாயம் ஏற்றப்பட்ட ஜவுளி, மட்பாண்டங்கள், ஆபரண கற்கள் தொடர்பான வணிகம் நடந்ததாகத் தெரிகிறது. இதற்கான ஆதாரங்கள் தற்போது பாண்டிச்சேரி அருங்காட்சியகத்தில் உள்ளன. பாண்டிச்சேரி பகுதி பல்லவர், சோழர், பாண்டியர் ஆட்சியின் கீழ் கி.பி.நான்காம் நூற்றாண்டு முதல் பதினான்காம் நூற்றாண்டு வரையும் பின்னர் விஜய நகர, முகலாய ஆதிக்கத்திலும் இருந்துள்ளது. ;