கே.பி. பாரதி மேம்பாட்டுக்கான சுற்றுலா ஆர்வலர் தானம் அறக்கட்டளை;
குறிஞ்சி மற்றும் முல்லை சுற்றுச்சூழல் நிலப்பகுதிகளால் சூழப்பட்ட கம்பம் பள்ளத்தாக்கு சுருளியாறும், பெரியாறு நீர் பாயும் வளமான ஊர்களைக் கொண்ட சங்க கால வரலாற்று சிறப்பு வாய்ந்த பகுதியாக விளங்குகிறது. சேர நாட்டிலிருந்து (கேரளாவிலிருந்து) குமுளி, குரங்கனி கணவாய்கள் மூலமாக பாண்டியநாட்டு மதுரைக்கு பண்டைய வணிகப்பெருவழி கம்பம் பள்ளதாக்கு ஊர்கள் வழியாக சென்றுள்ளது. இதனை உறுதிப்படு;தும் வகையில் ரோமானிய அரசன் அகஸ்டஸ் சீசரின் வெள்ளிக்காசுகள் கம்பத்திற்கு அருகிலுள்ள உத்தமபுரத்தில் கிடைத்துள்ளன. எல்லைப்பட்டிக்கு அருகிலுள்ள டம்டம் மேட்டில் வட இந்திய மௌரிய காலத்திய வெள்ளிக்காசுகள் கிடைத்துள்ளன. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தும் முற்காலப் பாண்டியர், காலத்திலும் பிற்காலப் பாண்டியர் காலத்திலும் தொடர்ந்து கேரளாவிலிருந்து தமிழ்நாட்டிற்கும் வணிகம் நடைபெற்றுள்ளதை கம்பம் பள்ளத்தாக்கில் கிடைத்த நாணயங்கள், கல்வெட்டுகள் உணர்த்துகின்றன. ;